காட்பாடியில் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் குப்பைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள்..

காட்பாடியில் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் குப்பைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள்


" alt="" aria-hidden="true" />


வேலூர் மாவட்டம், காட்பாடி எல்லைக்குட்பட்ட வேலூர் மாநகராட்சி மண்டலம் 1 பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட 43 வீடுகளில் உள்ள கழிவுகளை மாநகராட்சி ஊழியர்கள் மருத்துவ கழிவாக எடுத்துக் கொண்டு தமிழக அரசு வழிகாட்டுதலின்படி அதனை அப்புறபடுத்துகின்றனர். மாநகராட்சி ஊழியர்கள் முழுமையான பாதுகாப்பு உடை அணிந்து கொண்டு குப்பைகளை அகற்றுகின்றனர். குப்பைகளை எடுத்துச் செல்லும் வாகனம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. பின்பு தனிமைப்படுத்தப்பட்ட ஒவ்வொரு  வீடுகளுக்கு வேலூர் மாநகராட்சி ஊழியர்கள் சென்று அங்கு அவர்கள் சேகரித்து வைத்துள்ள குப்பை பைகள் மீது கிருமி நாசினி தெளித்து மாற்று  புதிய குப்பை  பைகளை அவர்களுக்கு  வழங்கிய பின்பு  அதனை குப்பை வாகனத்தில் ஏற்றி பயோலிங்க் எனும் நிறுவனத்திடம் வழங்கப்பட்டு குப்பைகள் எரியூட்டப்பட்டு வருகின்றது..